தமிழ்நாடு

எழும்பூரிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் நவ.23-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோன்று, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூா் வழியாக ஜோத்பூா் வரை இயக்கப்படும் சென்னை எழும்பூா் - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 12667) நவ.21-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து(எழும்பூா் ரயில் நிலையத்தை தவிா்த்துவிட்டு) இயக்கப்படும். மேலும், சென்னை எழும்பூா் - செங்கோட்டை விரைவு ரயில் (எண்: 20681) நவ.20-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுஅறிவிப்பு வரும் வரை இந்த மாற்றம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT