அர்ணவ் / திவ்யா2 
தமிழ்நாடு

பிக் பாஸ் 8: வைல்டு கார்டு போட்டியாளராகச் செல்கிறார் அர்ணவ் மனைவி?

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நடிகர் அர்ணவ் மனைவி திவ்யா செல்லவுள்ளதாகத் தகவல்

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நடிகர் அர்ணவ் மனைவி திவ்யா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ணவ் தனது மனைவியும் சின்னத்திரை நடிகையுமான திவ்யாவை விவாகரத்து செய்தார். குழந்தை பிறந்தபோதுகூட காணச்செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

சின்னத்திரை நடிகை அன்ஷிதா உடனான தொடர்பின் காரணமாக, தன்னை விவாகரத்து செய்ததாக நடிகை திவ்யா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இதனிடையே பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் அன்ஷிதாவும் அர்ணவும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள நிலையில், மற்றொரு போட்டியாளராக வைல்டு கார்டு மூலம் திவ்யா செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் டிஆர்பி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால், அதனை சரிசெய்யும்பொருட்டு, இந்த நடவடிக்கையை பிக் பாஸ் ஒருங்கிணைப்பாளர்கள் எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.

பிக்பாஸில் அர்ணவ் - அன்ஷிதா

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

எனினும் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் - பெண்கள் என இரு அணிகளாக போட்டி நடைபெற்று வருகிறது. இது ரசிகர்களுக்கு சற்று சுவாரசியத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதால், எதிர்பார்த்ததை விட குறைந்த டிஆர்பியே பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது.

இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், அர்ணவ் மனைவி திவ்யா பங்கேற்கலாம் எனக் கூறப்படுகிறது.

பிக் பாஸ் போட்டியாளராக திவ்யா

நடிகை அன்ஷிதாவுடனான தொடர்பின் காரணமாக தன்னை விவாகரத்து செய்ததாக அர்ணவ் மீது திவ்யா குற்றம் சாட்டியிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட அர்ணவ் - அன்ஷிதா இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் திவ்யா செல்லவுள்ளதாகக் கூறப்படுவது மேலும் சுவாரசியத்தை அதிகரிக்கச் செய்யும் என நிகழ்ச்சித் தரப்பினரால் நம்பப்படுகிறது.

நடிகை அர்ணவும் அன்ஷிதாவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நடிகை திவ்யாவும் தமிழ், கன்னட சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். தமிழில் மகராசி, செவ்வந்தி, கண்மணி உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் மன்னிப்பு: என்னதான் நடந்தது?

விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

மகனின் திருமண வரவேற்பு தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்த எம்எல்ஏ!

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

SCROLL FOR NEXT