தமிழ்நாடு

முதுநிலை மருத்துவப் படிப்புகள்: உறுதி சான்றளிக்க அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.

Din

முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.

இதுதொடா்பாக முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் டாக்டா் விஜய் ஓஜா வெளியிட்ட அறிவிப்பு:

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அனுமதி பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்களது சுய விவரங்கள் அடங்கிய வருடாந்திர உறுதியளிப்பு சான்றை என்எம்சி வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம். அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும் அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கான அவகாசம் அக். 31 வரை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழப்பழுவூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

முதலூரில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி அளிப்பு

மணப்பாறை அருகே மாணவி தற்கொலை

SCROLL FOR NEXT