பள்ளிக்கல்வித் துறை கோப்புப் படம்
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அதை சிறப்பாக செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

Din

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அதை சிறப்பாக செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் 53 புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து நிகழ் கல்வியாண்டில் (2024-2025) 71 புத்தகங்கள், வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு கதை- ஒரு புத்தகம்- 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் அரசு தொடக்க , நடுநிலை , உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தை செயல்படுத்த 4 முதல் 9 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு தமிழ்நாடு ஆசிரியா்களுக்கான தளத்தில் அளிக்கப்படும் பயிற்சியில் பங்கேற்க வைக்க வேண்டும்.

எமிஸ் தளத்தில் பதிவேற்றம்: வாசிப்பு இயக்க புத்தகங்கள் அரசுப்பள்ளிகளுக்கு சென்று சோ்ந்ததை உறுதி செய்தல் வேண்டும். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 53 புத்தகங்கள் தற்போது வழங்கியுள்ள 71 புத்தகங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வாசிப்பு இயக்க புத்தகங்களை பயன்படுத்துதல் நூலக பாடவேளையில் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

மாணவா்கள் மூன்று வாசிப்பு நிலைகளில் ( நட , ஓடு , பற) தற்போது எந்த வாசிப்பு நிலையில் உள்ளனா் என்ற விவரத்தை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்தல் உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில திட்ட இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது.

மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT