தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
த. வெள்ளையன் மறைவு
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த. வெள்ளையன் (76), நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
செப்டம்பர் 3-ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா், செப்.5-ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.\
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.