தமிழ்நாடு

சென்னை: மாநகரப் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஓட்டுநர் பலி! பயணிகள் படுகாயம்

மதுரவாயல் அருகே இன்று(செப்.16) மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

DIN

சென்னை: செங்குன்றத்திலிருந்து தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு 104 வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து, ஆட்டோ மீது மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மதுரவாயல் அருகே இன்று(செப்.16) மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. செங்குன்றம் - தாம்பரம் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு, அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் பயங்கரமாக மோதியுள்ளது. அதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. மேலும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக, செங்குன்றம் - தாம்பரம் சாலையில், மதுரவாயல் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

பிக் பாஸ் 9: தீபக்கை நேரலையில் வரைந்து அசத்திய கமருதீன்!

எதிர்பாராத கிளைமேக்ஸ்! மெளனம் பேசியதே தொடர் நிறைவு!

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

SCROLL FOR NEXT