தமிழ்நாட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஜியோ முதலீடு: முகேஷ் அம்பானி
மிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என்று ரிலையன்ஸ் குழுமம் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என்று ரிலையன்ஸ் குழுமம் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கிவைத்தார். இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் காணொலி வாயிலாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது, தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுவோம். 3.5 கோடி பயனீட்டாளர்களுக்கு மின்னணு புரட்சியை கொண்டு சேர்த்துள்ளோம்.
Advertisement
Advertisement
உலகில் அதிவிரைவாக 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்தது ஜியோ நிறுவனம். தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் காலத்திலும் ரிலையன்ஸ் நிறுவன திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.