பாஜக தலைவர் போட்டியில் நான் இல்லை! - அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “இதுபற்றி நான் தெளிவாக கூறியிருக்கிறேன். கிட்டத்தட்ட 2026 ஆம் ஆண்டு தேர்தலை அணுகப் போகிறோம் என்பதைப் பற்றி கூறியிருக்கிறோம். நான் மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடவில்லை. நான் யாரையும் கை காட்டவும் இல்லை. இதைப் பற்றி விளக்கமாக கூறவில்லை. நான் எந்த வம்பு சண்டைக்கும் வரவில்லை” என்றார்.
அதிமுக - பாஜக கூட்டணியால் தலைமை மாற்றப்படுகிறாதா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “அதைப் பற்றி நான் கருத்து கூறவில்லை. நல்லவர்கள் இருக்கக்கூடிய கட்சி; நல்ல ஆத்மாக்கள் இருக்கக்கூடிய கட்சி. அந்தக் கட்சி நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.
Advertisement
Advertisement
நீட் விவகாரத்தில் திமுக நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் புதிய நாடகத்தை தொடங்கட்டும். இதற்கு தொடக்கமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தட்டும்.
இதைப் பற்றி உச்சநீதிமன்றத்தில் எதிர்கொள்ளட்டும். பாஜகவில் தலைவருக்கான போட்டியில்லை. தலைமை தேர்ந்தெடுப்பதுதான். அனைவரும் சேர்ந்து ஏகமனதாகத் தேர்தெடுப்பதுதான். ஒரு விவசாயியின் மகனாக தொடர்ந்து இந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பேன். வருகிற பேரவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இந்த மண்ணைவிட்டு நான் எங்கும் செல்லப்போவது இல்லை.
டாஸ்மாக் விவகாரத்திலும் திமுக நாடகமாடுகிறது. இந்த வழக்கை அருகில் உள்ள மாநிலத்துக்கு மாற்ற சொல்கிறீர்கள். அமலாக்கத்துறை நேர்மையான முறையில் செயல்பட்டு அனைவரையும் கைது செய்யும்” என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.