FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

12 ஏப்ரல் 2025, 12:23 pm IST
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம்
பகிர்:

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்ற போதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர்த் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர் திருவிழா கடந்த 3 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும் இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உற்சவ திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Advertisement

Advertisement

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்- உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை ஏப்.8-ம் தேதியும், நம்பெருமாள்- ஸ்ரீரங்க நாச்சியார் சேர்த்தி சேவை நேற்று 11-ம் தேதியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய கோரதம் எனப்படும் பங்குனித் தேரோட்டம் இன்று 12-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு வீதி உலாவாக வந்து தேரில் அமர்ந்தார்.

இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் பங்கு கொண்ட பக்தர்கள் அனைவரும் கோவிந்தா... கோவிந்தா... ரங்கா... ரங்கா... என கோஷங்களுடன் ஆரவாரமாக தேரை வடம் பிடித்து வீதி உலாவாக இழுத்துச் சென்றனர்.

மேலும் இந்த திருவிழாவில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments