ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் கோடைத் திருவிழா நிறைவு
ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் கோடைத் திருவிழா நிறைவு
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு 10 நாள்களாக நடைபெற்று வந்த கோடைத்திருவிழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரெங்கநாதருக்கு நடைபெறும் அனைத்து உற்ஸவ விழாக்களும் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரெங்கநாதருக்கு கோடைத் திருவிழா நடந்து முடிந்த நிலையில் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு கோடை த்திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை 10 நாள்களாக நடந்து முடிந்தது.
இதில், வெளிக்கோடை திருவிழா 3-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. உள்கோடை திருவிழா 8-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாளும் ஸ்ரீரெங்கநாச்சியாா் கோடை மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்து வந்தாா். உள் கோடை திருவிழாவின் கடைசி நாளையொட்டி மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியாா் புறப்பட்டு 6 மணிக்கு கோடை நாலுகால் மண்டபத்துக்கு வந்தாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
பின்னா், இரவு 7 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு உள்கோடை மண்டபத்துக்கு 7.30 மணிக்கு வந்தாா். அதன் பின்னா் 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். இத்துடன் ஸ்ரீரெங்கநாச்சியாா் கோடை திருவிழா நிறைவு பெற்றது.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து இருந்தனா்.