நெப்போலியன் இல்லத்தில் கனிமொழி இன்ஸ்டாகிராம்
தமிழ்நாடு

ஜப்பானில் கனிமொழி - நெப்போலியன் சந்திப்பு!

ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனை சந்தித்தார்.

DIN

ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்‌ஷயாவை சந்தித்து திருமண வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி, கலைஞர் கருணாநிதி குறித்த நினைவுகளை நெப்போலியன் உடன் பகிர்ந்துகொண்டார்.

நெப்போலியன் குடும்பத்துடன் கனிமொழி

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெப்போலியன் பதிவிட்டுள்ளதாவது,

''நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் குரு, கலைஞரின் மகள் கனிமொழி, ஒரு வாரகாலம் ஜப்பானுக்கு வருகைதந்துள்ளார்!

நான்கு நாள்களுக்கு முன்பாக ஜப்பானின் இந்திய தூதுவர் சிபி ஜார்ஜ் கொடுத்த விருந்தில் , தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, கனிமொழி ஆகியோருடன் நானும், கலந்து கொண்டேன்.

இன்று ஏப்ரல் 21 திங்கள் கிழமை, ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு கனிமொழி வருகைதந்து தனுஷையும் அக்‌ஷயாவையும் வாழ்த்தினார்கள். சிலமணிநேரம் தலைவர் கலைஞரைப் பற்றி பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம். மகிழ்வோடும், மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம். இன்று இரவு இந்தியா திரும்புகிறார்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பௌா்ணமி கருட சேவை ரத்து

பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் பச்சோந்தி மீட்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

முல்லை லட்சுமி நாராயணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

SCROLL FOR NEXT