முகப்பு
தமிழ்நாடு

ஏப். 29 - மே 5 வரை தமிழ் வார விழா: முதல்வர் அறிவிப்பு!

தமிழ் வார விழா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்.

Updated On : 22 ஏப்ரல் 2025, 11:26 am IST
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

வரும் ஏப். 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழாக் கொண்டாடப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப். 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை தமிழ் வார விழாக் கொண்டாடப்படும். தமிழ் மொழியையும் பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Advertisement

Advertisement

தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர் கவிஞர் ஒருவருக்கு, பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும். புகழ்பெற்ற தமிழ் இலக்கிய படைப்பாளர்களின் படைப்புகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு அரங்கங்கள் நடத்தப்படும்.

தமிழ் மொழிகளின் பெருமைகளை எடுத்துரைக்க பள்ளிகளில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்கள் நடைபெறும். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும். நாம் அணைவரும் இணைந்து தமிழ் மொழியை உயர்த்துவோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: பழைய ஓய்வூதியத் திட்டம்: உரிய நேரத்தில் முடிவு - தங்கம் தென்னரசு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments