தமிழ்நாடு

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில்!

மும்பை - கன்னியாகுமரி இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கம்.

DIN

மும்பை - கன்னியாகுமரி இடையே வாராந்திர கோடை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்து வருகிறது.

அந்தவகையில் மும்பையிலிருந்து கன்னியாகுமரிக்கு கோடை சிறப்பு ரயில் அறிவிப்பை தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.

மே, ஜூன் மாதங்களில் வாரம்தோறும் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மும்பையிலிருந்து புறப்படும் ரயில் வியாழக்கிழமை பிற்பகல் 1..15 மணிக்கு கன்னியாகுமரியை அடைகிறது.

அதேபோல வியாழக்கிழமை கன்னியாகுமரியிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் ரயில், சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மும்பையை அடைகிறது.

அதன்படி, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையிலிருந்து குமரிக்கும் மே 8, 15, 22, 29, ஜூன் 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் குமரியிலிருந்து மும்பைக்கும் ரயில் இயக்கப்படுகிறது.

இன்று(ஏப். 23) பிற்பகல் 2.15 மணிக்கு இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

SCROLL FOR NEXT