கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் இனி வெப்பம் குறையும்

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஆக. 2) முதல் ஆக. 7-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆரஞ்ச் எச்சரிக்கை: ஆக. 2-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா், விழுப்புரம் அரியலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், ஆக. 3-இல் அரியலூா், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஆக. 3-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 2) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆக. 2 முதல் ஆக. 5-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT