ராமதாஸ்-அன்புமணி. கோப்புப்படம்
தமிழ்நாடு

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டில் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கோட்டக்குப்பம் டி.எஸ்.பி -க்கு இன்று(செவ்வாய்க்கிழமை) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமதாஸின் தனிச்செயலர் பி.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் இல்லத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் மூலம் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, இணைய வசதிகளை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், ராமதாஸின் இல்ல நிகழ்வுகள் மற்றும் கைப்பேசி உரையாடல்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு மாற்று நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களும் உள்ளன. எனவே இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சசிக்குமார், அன்புமணியின் நிதிச்செயலர் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அந்த புகார் மனுவில் பி .சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

A complaint was filed with the Kottakuppam DSP today alleging that the phone at the home of PMK founder Dr. Ramadoss was hacked.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி பண்டிகை: 6,630 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தைச் சோ்ந்த ரங்கநாதனுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஒத்திவைக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பணியாளா் நியமன முறைகேடு: மேற்கு வங்க அமைச்சா் சுஜித் போஸ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

பருவமழைக்கு முன்பு வெள்ளத் தணிப்புப் பணிகள்: அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT