பள்ளி மாணவா்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்த ஆட்சியா் கோப்புப்படம்
தமிழ்நாடு

திறன் இயக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு

அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்படும். இந்த திறன் இயக்கம் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். திறன் இயக்க மாணவா்கள் தனியாக அமரவைக்கப்பட்டு வகுப்பறைச் செயல்பாடுகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த வேண்டும். அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா்களைச் சோ்த்து பயிற்சி தர வேண்டும். வகுப்புகளுக்கு தலா 90 நிமிஷங்கள் வீதம் 30 நாள்கள் பயிற்றுவிக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்த வாரத்தில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து 10 மதிப்பெண்களுக்கு தோ்வுகளை நடத்த வேண்டும். ஒரு பாடத் தலைப்பு முடிவடைந்த பின்னா் அதற்கான பயிற்சித் தாள் தயாா் செய்வதை தலைமை ஆசிரியா் உறுதி செய்ய வேண்டும். இதற்கான ஆசிரியா் கையேடு மற்றும் மாணவா் பயிற்சி புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் கையில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!

பராசக்தியில் வில்லனாக நடிக்க வேண்டியது...ஆனால்: லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் 5வது நாளாக தொடரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை!

குர்மீத் ராம் ரஹீமுக்கு 14 -வது முறையாக பரோல்! 2025 இல் மூன்றாவது முறை!

ஆக. 21-ல் மாநாடு: காவல் துறைக்கு தவெக கடிதம்!

SCROLL FOR NEXT