தமிழ்நாடு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

வரும் சனிக்கிழமை (ஆக.9), ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) ஆகிய வார இறுதி விடுமுறை தினங்களையொட்டி கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது:

தினமணி செய்திச் சேவை

வரும் சனிக்கிழமை (ஆக.9), ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) ஆகிய வார இறுதி விடுமுறை தினங்களையொட்டி கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது:

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.8) 340 பேருந்துகள், சனிக்கிழமை 350 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி,

ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை 55 பேருந்துகள், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை தலா 20 பேருந்துகளும் என மொத்தம் 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT