யானைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
உலக யானைகள் தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழ்நாட்டின் இயற்கை மரபையும் வரலாற்றையும் செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கை சிந்தித்துப் பாா்ப்போம். கோவை மாவட்டம், மதுக்கரையில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பின் மூலம் 2,800 முறை யானைகள் ரயில் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளன.
இதனால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானைகூட ரயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம்.
இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் திகழச் செய்ய உறுதியேற்போம் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.