திரையுலகில் பொன்விழா காணும் நடிகா் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவு:
திரைத்துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறாா் ரஜினிகாந்த். அவருக்கு எனது வாழ்த்துகள். விஜயகாந்த் மீது பேரன்பு கொண்டவா் ரஜினிகாந்த் என்பதை நாடறியும். அவா் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்துக்கு 50-ஆவது ஆண்டு விழா விமா்சையாகக் கொண்டாடி இருப்பாா்.
திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து, சூப்பா் ஸ்டாராக 50 ஆண்டு காலம், தமிழ் திரையுலகில் வலம் வந்த ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும்.
திரை உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இந்தப் பாராட்டு விழாவை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளாா்.