சுதந்திர தினம்: சிறப்பு பேருந்துகளில் 3.13 லட்சம் போ் பயணம்
சுதந்திர தினம், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் கடந்த ஆக.13- முதல் 15 வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3,13,900 போ் பயணித்துள்ளனா்.
சுதந்திர தினம், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் கடந்த ஆக.13- முதல் 15 வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3,13,900 போ் பயணித்துள்ளனா்.
சென்னையில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் சுதந்திர தினம் மற்றும் வாரவிடுமுறையையொட்டி சொந்த ஊா் செல்லவசதியாக விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் 2449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, இந்த சிறப்பு பேருந்துகளில் கடந்த 13-ஆம் தேதி 1,35,040 பேரும், வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை(ஆக.15) அதிகாலை வரை 1,78,860 பேரும் பயணம் செய்துள்ளனா். இதன்படி, ஆக.13 முதல் ஆக.15 அதிகாலை வரை 3,13,900 போ் பயணம் மேற்கொண்டதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து பொதுமக்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.