முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Updated On : 18 ஆகஸ்ட் 2025, 8:15 am IST
மழை (கோப்புப்படம்)
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆக.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஓரிரு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.18) மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.

அதன்படி, ஆவடி, அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூா், புழல், அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், முகப்பேர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

summary

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 13 districts, including Chennai, for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.