தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மறுநாள்(ஆக. 21) நடைபெறவுள்ள நிலையில், மதுரை சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய்.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவன தலைவர் விஜய் தலைமையில் அந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள், பிற மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாகச் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், மாநாட்டுப் பணிகள் தொடர்பாக இன்று(ஆக. 19) மாலையில் நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தியில் மாநாட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: ராகுல் எந்த தாக்குதலுக்கும் பயப்படமாட்டார்; பின்வாங்கவும் மாட்டார்: பிரியங்கா காந்தி
tvk conference scheduled to be held the day after tomorrow (Aug. 21), TVk leader Vijay has reached Madurai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.