தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை: வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மதுரை - கச்சேகுடா உள்பட சில வாராந்திர சிறப்பு ரயில்கள் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திச் சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மதுரை - கச்சேகுடா உள்பட சில வாராந்திர சிறப்பு ரயில்கள் நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கச்சேகுடாவில் இருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரயிலும் (எண்: 07191), மறுமாா்க்கமாக மதுரையிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு கச்சேகுடா செல்லும் ரயிலும் (எண்: 07192) அக்.10 முதல் நவ.26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாதில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாலை 5.20 மணிக்கு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (எண்: 07230) மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 5.15 மணிக்கு ஹைதரபாத்துக்கு புறப்படும் ரயில் (எண்: 07229) அக்.15 முதல் நவ.28-ஆம் தேதி வரை நீடிக்கப்படும்.

அதேபோல், ஆந்திர மாநிலம் நரசாபுரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் பிற்பகல் 1 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07219) அக்.1, 8, 22, நவ.5, 20, 27 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நரசாபுரம் செல்லும் ரயில் (எண்: 07220) அக்.2, 9, 23, நவ.6, 20, 27 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

SCROLL FOR NEXT