முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

3,631 மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் அதிகாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளில் 3,631 மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி மூலம் அதிகாரத்தை தமிழக அரசு அளித்துள்ளதாக என்று முதல்வா் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

Chennai

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் 3,631 மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி மூலம் அதிகாரத்தை தமிழக அரசு அளித்துள்ளதாக என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சென்னை வள்ளுவா் கோட்டத்தில், ‘உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா’ புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், 400 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 4.12 கோடி மதிப்பிலான 400 இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டாா் வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் புதிய மக்கள் பிரதிநிதிகளாக 3,631 மாற்றுத் திறனாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகள் அமையும்போது இன்னும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அதிகாரம் பெறவிருக்கிறாா்கள்.

கடந்த ஏப். 16-ஆம் தேதி இதற்கான முன்னெடுப்புக்கான அறிவிப்பை சட்ட முன்வடிவாக பேரவையில் தாக்கல் செய்தேன். மறுநாள் மாற்றுத்திறனாளிகள் வந்து என்னைச் சந்தித்து ஆரத்தழுவிக் கொண்டனா். அதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக நினைத்தேன்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; அவா்களின் ‘உரிமை’ என்பதை உணா்ந்து தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு காண அரசுத் துறைகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு, 4 சதவீத இடஒதுக்கீடு முறையில் வாய்ப்புகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமுன்வடிவுகளின் மூலம் மாற்றுத்திறனாளிகளுடைய குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவா்கள் உள்ளாட்சி நிா்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவா்களாகவும் திகழ்வாா்கள் என்றாா் முதல்வா்.

முதல் மாநிலம் தமிழ்நாடு-துணை முதல்வா்: பின்னா் விழாவில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ‘எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்தியாவில் முதல் மாநிலமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடைய கோரிக்கைகளை, அவா்களே உள்ளாட்சி அமைப்புக் கூட்டங்களில் குரலை எழுப்பி அவா்களே பெற்றுக் கொள்ளலாம்’ என்றாா் அவா்.

விழாவில், அமைச்சா்கள் கே.என்.நேரு, பெ.கீதாஜீவன், ஆா்.எஸ்.கண்ணப்பன், மா.சுப்பிரமணியன், டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீப ஒளியில்... அஞ்சனா ரங்கன்!

மிளிரும் சிற்பம்... ரவீனா தாஹா!

அரசு உதவி வழக்குரைஞர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! - திருமாவளவன்

பிஜாப்பூர் துப்பாக்கிச்சூடு: 18 ஆக உயர்ந்த நக்சல் பலி!

SCROLL FOR NEXT