ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அரசு செவிலியர்கள் சங்கம் மற்றும் ஒப்பந்த செவிலியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறோம்.
இதுவரை 3,614 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 7,400 ஒப்பந்த செவிலியர்கள் உள்ளனர். செவிலியர்களுடைய கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு 723 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். மற்றவை காலியிடங்கள் உருவாகும்பட்சத்தில் படிப்படியாக நிரப்பப்படும்.
காலிப் பணியிடங்கள் உருவானால் பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
புதிய செவிலியர் கல்லூரிகளை உருவாக்குவது, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணியில் அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு செவிலியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.