கோவையில் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்!
கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது.
கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது.
கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் அங்கு பாதிப்பு ஏற்பட்டது.
மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம், கடும் பனி மூட்டம் காரணமாக, தரையிறங்க முடியாமல் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னர் தரையிறங்கியது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அதேபோல தில்லியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
சென்னையிலும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரவேண்டிய ரயில்கள், விமானங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே செல்லும் ரயில்கள், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.