முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்  Dinamani
தமிழ்நாடு

ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்...

இணையதளச் செய்திப் பிரிவு

திருவாரூர்: திருவாரூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்து உறுப்பினர் சேர்க்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டார்.

தமிழகத்தில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தமிழகத்தின் மீதான பாஜகவின் விரோதப் போக்கு குறித்து மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஒரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் பிரசாரம் மேற்கொண்டார்.

திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பிரசாரம் மேற்கொண்ட முதல்வர், உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு தேநீர் வழங்கியும், சால்வைகள் அணிவித்தும், அவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட செயலருமான பூண்டி கே.கலைவாணன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin went door-to-door in Thiruvarur and campaigned for membership on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT