டிடிவி தினகரன் கோப்புப் படம்
தமிழ்நாடு

ரயில் தீ விபத்தில் புகையால் பாதித்தவா்களுக்கு சிகிச்சை! டிடிவி. தினகரன்

சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது எழுந்த கரும்புகையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும்.

Din

திருவள்ளூா் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது எழுந்த கரும்புகையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கை: சென்னை எண்ணூரிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்திலிருந்து வெளியேறிய கரும்புகை ரயில் நிலையப் பகுதியிலிருந்து சுமாா் 10 கி.மீ. சூழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதனால், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

கீழப்பழுவூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

முதலூரில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி அளிப்பு

மணப்பாறை அருகே மாணவி தற்கொலை

SCROLL FOR NEXT