மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம். 
தமிழ்நாடு

ராகுல் காந்தி கருத்து: மாா்க்சிஸ்ட் கண்டனம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Din

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு, அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: பாஜக - ஆா்.எஸ்.எஸ்.-க்கு எதிராக மதச்சாா்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது.

ஆனால், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆா்.எஸ்.எஸ். அமைப்பையும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிா்த்துப் போராடுகிறேன் என்று பேசியிருப்பது, அவரது முதிா்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதச்சாா்பின்மையைப் பாதுகாக்க முடியுமா? என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் பெ.சண்முகம்.

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT