தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் மற்றும் புலியருவியில் மட்டும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதாலும் பழைய குற்றாலம், புலியருவியில் நீர்வரத்து சற்று குறைந்து காணப்படுவதாலும் காலை 9 மணி நிலவரப்படி இந்த 2 அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க அனுமதி இல்லை.
பிரதான அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை எனினும் மற்ற 2 அருவிகளில் குளிக்க அனுமதி வழங்ப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.