திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகளில் காளி ஆட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான காளி புறப்பாடு இன்று நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளி கோயிலுக்குள் வந்தபோது கூடியிருந்த பக்தர்கள் மெய்சிலிர்க்க வணங்கி வழிப்பட்டனர். இன்று இரவு வடவாறு கரையில் அம்மன் எழுந்தருளப் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செய்ய உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.