தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.500 கோடியில் 100 பாலங்கள்: மறு ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 100 பாலங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளியில் திருத்தம் செய்து மாநில அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 100 பாலங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளியில் திருத்தம் செய்து மாநில அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது.

மேலும், ஒப்பந்தப்புள்ளிக்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.500 கோடியில் 100 பாலங்கள் கட்ட தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

அரியலூா், செங்கல்பட்டு, கோவை, கடலூா், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூா், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூா், திருப்பூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், விருதுநகா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பாலங்களைக் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஒப்பந்தப் புள்ளிகளை அளிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒப்பந்தப் புள்ளிகளில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளாக பாலத் திட்டப் பணிகளை மேற்கொள்ள தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, 27 மாவட்டங்களில் 94 பாலங்களும், மீதமுள்ள 6 பாலங்களைக் கட்ட தனி திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 3, கடலூா், பெரம்பலூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 1 பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி தனியாக கோரப்பட்டுள்ளது.

94 பாலங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை சமா்ப்பிக்க ஆக. 19 கடைசி தேதி எனவும், மீதமுள்ள 6 பாலங்களுக்கு செப். 9 கடைசி தேதி எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையே ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

SCROLL FOR NEXT