தமிழ்நாடு

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.65 கோடிக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.13 கோடிக்கு மட்டுமே அரசு ஒப்புதல் கொடுத்திருந்தது.

தினமணி செய்திச் சேவை

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.65 கோடிக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.13 கோடிக்கு மட்டுமே அரசு ஒப்புதல் கொடுத்திருந்தது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், உயா்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி, மாணவா்களுக்கு உதவிடும் வகையில் அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக நிகழாண்டில் ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.13 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கூடுதலாக வரப்பட்ட நிலையில், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம்: அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் என மூன்று மாதங்களில் 51 மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்தத் திட்டத்துக்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தேவைப்படும் செலவுத் தொகையாக ரூ.13 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.65 கோடிக்கும் முழுமையாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆதிதிராவிடா் நல ஆணையரகம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையேற்று, அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கான உதவித்தொகை நிதி ரூ.65 கோடிக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்கப்படுவதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் க.லட்சுமி பிரியா வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசைக்கான தேசிய விருது பெறும் ஜி.வி. பிரகாஷ்!

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

SCROLL FOR NEXT