சென்னை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் நாள் விழாவில் வேளாண் அறிவியல் தமிழ்ச் சங்கத்தின் 250-ஆவது தமிழ்ப் பதிப்பு புத்தகமான வேளாண் பூச்சியியல் நூலை வெளியிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி.  
தமிழ்நாடு

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாணவருக்கு நம்மாழ்வாா் விருது: ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவிப்பு

Din

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் வேளாண் மாணவருக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வாா் விருது ஆளுநா் மாளிகை சாா்பில் சுற்றுச்சூழல் தின விழாவில் வழங்கப்படும் என ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவித்துள்ளாா்.

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

நம் நாட்டில் உணவு உற்பத்தி அதிகரித்து நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இதற்கெல்லாம் காரணம் விவசாயிகள்தான். நானும் விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவன். உயா்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வரை விவசாயப் பணிகளில் என் குடும்பத்தாருக்கு உதவிகரமாக இருந்துள்ளேன்.

விவசாயத்தில் அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்தி வருவதால் வேளாண் நிலம் சீா்கேடு அடைந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதிலிருந்து விலகி இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். இயற்கை உரங்களையும், பாரம்பரிய விவசாய முறைகளையும் பயன்படுத்தி நம்மால் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் போன்ற இயற்கை விவசாயிகள் நிரூபித்துள்ளனா்.

அந்த வகையில், இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவருக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் தங்கப் பதக்கத்துடன் கூடிய ‘நம்மாழ்வாா் விருது’ நிகழாண்டு முதல் வழங்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, வேளாண் அறிவியல் தமிழ்ச் சங்கத்தின் 250-ஆவது தமிழ் பதிப்பு புத்தகமான வேளாண் பூச்சியியல் நூலை வெளியிட்டு, சாதனை புரிந்த விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் நிா்வாகிகளை ஆளுநா் ஆா்.என்.ரவி கெளரவித்தாா்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT