பிரேமலதா விஜயகாந்த்  
தமிழ்நாடு

விஜய்யுடன் கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் என்ன சொல்கிறார்?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால்தான் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்

DIN

கரூர்: விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கரூரில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் 2026-இல் கூட்டணி ஆட்சி வந்தால்தான். அப்போதுதான், தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற அவர் கரூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். இந்தநிலையில், திங்கள்கிழமை(ஜூன் 9) காலை செய்தியாளர்களுடன் பேசிய அவர், “2026-இல் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட, தனது வாக்குறுதிதான் முக்கியம் என்று எடப்பாடி பழனிச்சாமி எங்களிடம் தெரிவித்துள்ளார்.

விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும்.

2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும். திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம்.

234 தொகுதிகளுக்கும் 2 நாள்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடக்கிறது. இதை முதல்வர் சரி செய்ய வேண்டும். குறிப்பாக, தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளைச் சம்பவம் அதிகரித்துள்ளது” என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!

அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!

பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக

முதல்முறையாக Space Needle கோபுரத்தில்பறந்த இந்திய தேசியக் கொடி! | US

SCROLL FOR NEXT