அமைச்சா் தங்கம் தென்னரசு கோப்புப்படம்
தமிழ்நாடு

கீழடி: வரலாற்று உண்மை மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது - தங்கம் தென்னரசு

கீழடி குறித்து மத்திய அமைச்சர் ஷெகாவத் பேசியதற்கு தங்கம் தென்னரசு பதில்.

DIN

கீழடி குறித்து மத்திய கலாசாரத் துறை அமைச்சர் ஷெகாவத் பேசியதற்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் ஷெகாவத், சென்னையில் இன்று(ஜூன் 10) செய்தியாளர்களிடையே விளக்கம் அளித்தார்.

அவர் பேசுகையில், அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும். இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?

மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்!

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT