மா. சுப்பிரமணியன் கோப்புப் படம்
தமிழ்நாடு

மக்களிடம் நடத்திய ரத்தப் பரிசோதனையில் தெரிய வந்த உண்மை.. மா. சுப்பிரமணியன்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பதாக மக்களிடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் தெரிய வந்திருப்பதாக மா. சுப்பிரமணியன் தகவல்.

DIN

தமிழகத்தில் உள்ள மக்களுக்கு கரோனாவுக்கு எதிராக 97 சதவீதம் என்ற அளவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது, எனவே கரோனா குறித்தான அச்சம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தில் சிக்கலுள்ள கர்ப்பங்களுக்கான சிகிச்சை வழிக்காட்டுதல்கள் பயிற்சி கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

மகிழ்ச்சியான மகப்பேறு மகத்தான மருத்துவம் என்ற தலைப்புகளில் சிக்கலுள்ள கர்ப்பங்களுக்கான சிகிச்சை வழிக்காட்டுதல்கள் பயிற்சி கருத்தரங்கம் மற்றும் அது குறித்தான கையேடுகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

முன்னதாக மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், மக்களிடம், 2020 ஆம் ஆண்டு கரோனாவுக்கு எதிராக 32% நோய் எதிர்ப்பு சக்தி என்ற அளவில் இருந்தது. இது 2021 ஆம் ஆண்டு 29 % என்ற அளவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்பட்டது. ஆனால், திமுக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இது 80 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டது.

தற்போது கரோனாவுக்கு எதிராக 97 % என்ற அளவில் நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் இடம் அதிகரித்து உள்ளது. பல தரப்பு மக்கள் இடம் பல இடங்களில் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகள் மூலமாக இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். எனவே கரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் ஐந்து கட்டங்களாக பல்வேறு காலங்களில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும்

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் இருந்து 19 கரோனா மாதிரிகள் சோதனைக்கு அனுப்பட்டது. அதில் ஒமைக்காரன் வகை கரோனா எனவும் அது வீரியம் அற்ற கரோனா எனவும் அறியப்பட்டது.

கரோனா குறித்து அச்சம் வேண்டாம் எனவும் ஏற்கனவே கர்பிணிகள் மற்றும் வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்கின்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பை கண்காணித்து வருகிறார்கள் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது

தமிழக முதல்வா் இன்று தருமபுரிக்கு வருகை

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

SCROLL FOR NEXT