மழை (கோப்புப்படம்) DIN
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது. இது மேற்கு -வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Din

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது. இது மேற்கு -வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வாய்க்கிழமை காலை தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனையொட்டிய மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இப்புயல் சின்னம் ஜூன் 18-ஆம் தேதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வானிலை சாதகம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜூன் 18 முதல் ஜூன் 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூன் 18-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 18-இல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 210 மி. மீ. மழை பதிவானது. மேலும் பாா்சன் வேலி (நீலகிரி) 110, போா்த்திமந்து (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) தலா 100 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா குமரிக் கடல் மற்றும் வங்க கடலில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் இதனால் மீனவா்கள் இப்போது மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT