ஏ.டி.ஜி.பி. ஜெயராம்  din
தமிழ்நாடு

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டது பற்றி...

DIN

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு இருப்பதாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டாா்.

கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதும், அவா் திருவாலங்காடு காவல் நிலைய ஜீப்பில் ஏற்றப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டாா். இரவு 8.30 மணியளவில் ஜெயராம் திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அவரிடம் வழக்குத் தொடா்பாக திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி மற்றும் திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். அவா் அளித்த வாக்குமூலத்தை எழுத்து பூா்வமாகவும், விடியோவாகவும் பதிவு செய்தனா்.

தொடர்ந்து நேற்று நள்ளிரவே நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்ட ஜெயராமை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT