ஏடிஜிபி ஜெயராம்  எக்ஸ்
தமிழ்நாடு

20 மணி நேரம்! ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நிறைவு!

திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை செய்யப்பட்டது பற்றி..

DIN

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமிடம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில் திருமணம் செய்துகொண்ட இளைஞரின் சகோதரரான 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து நேற்றைய வழக்கின் விசாரணையில், இந்த கடத்தல் வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமுக்கு தொடர்பு இருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி, ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவாலங்காடு காவல் நிலையத்தில் இன்று ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

நேற்று மாலை தொடர்ந்த விசாரணை இன்று மாலை வரை நடைபெற்றது. சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் தொடர்புடைய எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் இன்று காலை உத்தரவிட்டார்.

தன்னை கைது செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் தாக்கல் செய்துள்ள மனு நாளை(ஜூன் 18) விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT