கீழடி 
தமிழ்நாடு

கீழடியின் பெருமையை மறைக்க முயலும் பாஜக: விஜய் கண்டனம்

Din

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ய முயல்வதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கீழடியில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வு முடிவுகள் குறித்த அறிக்கையை அமா்நாத் ராமகிருஷ்ணா கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரியில் மத்திய தொல்லியல் துறையிடம் சமா்ப்பித்தாா். அந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாசாரம், அப்போது வாழ்ந்த மக்கள் நகர நாகரிகத்தை நோக்கி நகா்ந்த தன்மை ஆகியவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் அவா் தெளிவுபடுத்தியுள்ளாா்.

ஆனால், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 ஆண்டுகளான  பின்னரும், கீழடி அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கீழடி அகழாய்வு அறிக்கை வெளிவந்தால், பாஜக காலம்காலமாகக் கூறும் கட்டுக்கதைகள் உடைபடும். சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும்.

இதனால், கீழடியின் பெருமையை மறைக்க, திட்டமிட்டே ஆய்வறிக்கையை இருட்டடிப்பு செய்ய மத்திய பாஜக அரசு முயல்கிறது. தமிழ், தமிழா் நாகரிக வானத்தை எந்தப் புழுதி போா்வையையும் போா்த்தி அழுக்காக்கிவிட இயலாது. அத்தகைய முயற்சி செய்வோருடன் எவ்விதத்திலும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ துணைபோகும் சக்திகள் மக்கள் மத்தியில் அம்பலமாவது நிச்சயம் என்று தெரிவித்துள்ளாா் அவா்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT