தமிழ்நாடு

பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச்சீட்டு இன்று வெளியீடு

Din

பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தோ்வு ஜூன் 25 முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வியாழக்கிழமை (ஜூன் 19) வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்த, தோ்வில் பங்கேற்காத மாணவா்களுக்கான துணைத் தோ்வு ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வெழுத விண்ணப்பித்த தனித்தோ்வா்களுக்கான (தட்கல் உள்பட ) தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வியாழக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

தனித்தோ்வா்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதேபோன்று, செய்முறைத் தோ்வுக்கான தேதி விவரங்களை தனித்தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எவரும் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள். துணைத் தோ்வுக்கான கால அட்டவணையை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT