கோப்புப் படம் 
தமிழ்நாடு

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம்: ரூ.125 கோடி நிதி விடுவிப்பு

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.125 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

Din

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.125 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. உத்தரவு விவரம்:

கிராமப்புறங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ரூ.1,087.33 கோடிக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.500 கோடி மாநில அரசின் பங்காகும்.

மாநில அரசின் பங்களிப்பு தொகையில் நான்கில் ஒரு பங்கு நிதியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான கடிதத்தை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆணையரகம் அனுப்பி இருந்தது. இந்தக் கடிதத்தின் அடிப்படையில், அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்துக்கான மாநில அரசின் பங்கு நிதியில் ரூ.125 கோடி விடுவிக்கப்படுகிறது.

இந்த நிதியைக் கொண்டு ஆதிதிராவிடா், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 இடங்கள் முன்னேறி தனது உச்சத்தை அடைந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!

வெள்ளத்தில் இந்தோனேசியா! இடிந்த மூன்று மாடி கட்டடம்!

ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணியில் மாற்றம்!

“இதற்கு மேலும் கூட்டணி வேண்டுமா?” செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு குறித்து திருமா விமர்சனம்

காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

SCROLL FOR NEXT