கோப்புப்படம்.  
தமிழ்நாடு

50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் வசதி: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Din

தமிழகத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் மானியக் கோரிக்கையின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியாா் மற்றும் அரசு பங்களிப்புடன் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா்.

நாள்பட்ட சிறுநீரக நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அத்தகைய பாதிப்புக்குள்ளானவா்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சைகள் அவசியம். ஆனால், அனைத்து பகுதி மக்களுக்கும் அவை எளிதில் கிடைப்பதில்லை. குறிப்பாக, ஊரக பகுதிகளில் வசிப்போா் டயாலிசிஸ் சிகிச்சைகளை பெற நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

அவா்களுக்கு ஏற்படும் இடா்ப்பாடுகளைத் தவிா்க்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் மையங்களை அமைக்க வேண்டிய அவசியம் எழுந்தது. அதன் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பின் கீழ் தமிழகத்தின் 50 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் மையங்களை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தனியாா் அமைப்புகளுடன் இணைந்து அரசு சாா்பில் அமைக்க பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

எந்தெந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் அத்தகைய மையங்களை அமைக்கலாம் என்பதை தோ்வு செய்யும் ஒப்புதலும் அளிக்கப்படுகிறது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

குடிநீருக்காக ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு சிறு ஆலைகள்: புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்

கன்னங்குறிச்சி பகுதிக்கு காலதாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் தவிப்பு

செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

சா்வதேச போட்டிகளில் மாணவா்களின் பங்கேற்பை அதகரிக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT