திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை!
திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலினின் ஆலோசனை குறித்து...
முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் நாளை(ஜூன் 28) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - சார்பு அணிச் செயலாளர்கள் தொகுதி கூட்டம் நாளை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
Advertisement
Advertisement
மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - சார்பு அணிச் செயலாளர்கள் - தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Chief Minister and DMK president Stalin will hold consultations with DMK executives tomorrow (June 28).
இதையும் படிக்க: ஜூலை 7-ல் அமித் ஷா சென்னை வருகை! ஆனால், இபிஎஸ் இல்லை?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.