FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேரவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி

பேரவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

17 மார்ச் 2025, 12:37 pm IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்.
பகிர்:

பேரவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தில் அவர் பேசுகையில், பேரவைத் தலைவர் பெரும்பாலான நேரங்களில் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

பேரவைத் தலைவரின் செயல்பாடு விதிகளுக்கு முரணாக உள்ளது. அதிமுக உறுப்பினர்கள் பேசினால் பேரவைத் தலைவர் அவசரப்படுத்துகிறார்.நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை டிவிஷனுக்கு விட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பேரவை திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது.

தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments