முகப்பு
தமிழ்நாடு

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Updated On : 30 மார்ச் 2025, 4:42 pm IST
கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை.
பகிர்:

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

என்னுடைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது, அரசியலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை.

Advertisement

Advertisement

திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. காங்கிரஸ் போல் தில்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது.

கருத்துக்கணிப்பில் கூட முதல்வர் ஸ்டாலின் முதன்மை பெறவில்லை, மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது. ஒரு மாநிலத்தில் மோசமான முதல்வராக இருந்தாலும் 40-43% ஆதரவு இருக்கும்.

ஆனால் ஸ்டாலினுக்கு 25% தான். விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

திமுக எதிராக தமிழகத்தில் அதிக போராட்டங்களை நடத்தியது பாஜக. ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர், நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திப்பது எந்த விதத்திலும் தவறில்லை.

ரஷிய அதிபர் புதின் கார் வெடித்து சிதறியது!

பாஜக எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது. இந்தியா முழுவதும் பிரசாரத்திற்கு சென்றுள்ளேன். 13 மாநிலங்களில் 3 ஆண்டுகளில் பிரசாரம் செய்துள்ளேன். யாரை பற்றியும் நான் கடுமையாக விமர்சிக்கவில்லை. கருத்துகளை கருத்துகளாக வைத்திருக்கிறேன்.

விஜய், செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதில் அரசியல் காரணம் இல்லை. திமுகவை கொள்கை ரீதியாக பாஜக எதிர்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments