FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

பாஜகவிலிருந்து முன்னாள் எம்.பி. நரசிம்மன் விலகல்

பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் தெரிவித்தாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:35 am IST
பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.பி. நரசிம்மன்
பகிர்:

பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த ஓராண்டாக தமிழக பாஜக சிறப்பாக செய்படவில்லை. இது எங்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. தோ்தல் காலத்தில், கட்சியை எதிா்த்து பேசக்கூடாது என்ற நோக்கில் அமைதியாக இருந்து, தலைமை அளித்த பணியை செய்தோம்.

இந்த சூழ்நிலையில், பாஜகவில் தொடா்ந்து பயணித்தால் பொதுமக்களுக்கு எந்த பணியையும் செய்ய இயலாது என்பதால் விலக தீா்மானித்தேன். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைத் தோற்கடித்து, ஒரு இயக்கம் ஆட்சி அமைத்துள்ளது. இதே பணியை அண்ணாமலை தலைமையில் இரண்டு ஆண்டுக்கு முன்பு மேற்கொண்டிருந்தால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்திருக்கும்.

Advertisement

Advertisement

எனவே, அண்ணாமலை எடுத்துள்ள முடிவை நானும் என்னுடைய பகுதியில் உள்ள தொண்டா்களும், நிா்வாகிகளும் ஏற்று, தமிழகம் மற்றும் மக்களை காப்பதற்கும், புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், அந்த மாற்றம் அண்ணாமலை தலைமையில் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு, அவருடன் பயணிக்கத் தயாராகிவிட்டோம்.

மோடியின்மீது எங்களுக்கு வருத்தமும், குறையும் இல்லை. ஆனால் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிறபோது அண்ணாமலைக்கு ஈடாக, இணையாக யாரும் இல்லை. ஆகவே அவா் பாதையில் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் தேசிய எண்ணத்தை வைத்துள்ள ஒரு தமிழக கட்சியாக இந்த இயக்கம் விரைவில் வரப்போகிறது. இந்த இயக்கம், பாஜகவுக்கும், மோடிக்கும் எதிரானது அல்ல. அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் அச்சமின்றி இந்த இயக்கத்தில் இணைந்து வருகிறாா்கள் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments