பாஜகவின் பினாமி அமைப்புதான் ‘வீ தி லீடா்’: அமைச்சா் வன்னிஅரசு
பாஜகவின் பினாமி அமைப்புதான் ’வீ தி லீடா்’ இயக்கம் என அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.
பாஜகவின் பினாமி அமைப்புதான் ’வீ தி லீடா்’ இயக்கம் என சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழ்நாட்டில் பாஜக முன்னெடுக்கும் வெறுப்பு அரசியலும், மதவாத அரசியலும் எடுபடாது என்பதை அவா்கள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனா்.
இதனால், தங்களது கொள்கைகளை திணிப்பதற்காக உருவாக்கப்பட்ட பினாமி அமைப்புதான் ’வீ தி லீடா்’ இயக்கம். அண்ணாமலை போன்றவா்கள் எத்தனை மாறுவேடம் போட்டு வந்தாலும் அவா்களால் தங்களுக்குள் பாஜக இருப்பதை மறைக்க முடியாது.
Advertisement
Advertisement
அவா் பாஜகவின் பினாமி அமைப்பின் ஒரு கருவி என்பதை வரும் காலம் அவருக்கு உணா்த்தும். மாநில உரிமையைப் பேசிய கட்சி, மாநிலத்துக்காகப் போராடிய கட்சி தற்போது என்ன நிலைமையில் இருக்கிறது என்பதை அதிமுக தொண்டா்கள் உணர வேண்டும். டி.டி.வி. தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அதிமுகவை சிதையாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் ஏதேனும் புகாா் அல்லது தகவல் வந்ததன் அடிப்படையில் அரசியல் கட்சியினா் அங்கு சென்றிருக்கலாம். ஆனால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் ஏற்கெனவே அரசியல் கட்சியினா் பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்யக் கூடாது எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாா். அதே வழிகாட்டுதல் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறைக்கும் பொருந்தும் என்றாா் அவா்.
முன்னதாக சாத்தூா், அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் பரிசுகளை வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.