பாலாஜி  
தமிழ்நாடு

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவர் பலி

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

DIN

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள இந்திராபட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி(21). இவர் இவரது நண்பர் நவீன் குமார்(18).

இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று நடைபெறும் இந்திராபட்டி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் விழாவிற்கு புதிய ஆடை எடுப்பதற்காக நேற்று இரவு இலுப்பூர் வந்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தை பாலாஜி ஒட்டி உள்ளார். இவர்கள் ஒட்டி வந்த வாகனம் இலுப்பூர்-விராலிமலை சாலையில் உள்ள தனியார் எரிவாயு நிறுவனம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதியது.

விழுப்புரம் மாவட்டத்தில் ரமலான் கொண்டாட்டம்

இதில் தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த பாலாஜி நிகழ்வு இடத்திலேயே பலியானார்.

அவரது நண்பர் நவீன் குமார் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்த விபத்தை ஏற்படுத்திய பாக்கியராஜ் சிறிய காயங்களுடன் உயிர்த் தப்பினார்.

இலுப்பூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடல் எடை குறைய...

புள்ளிகள்

புதிய நிலா!

வீட்டுக் குறிப்புகள்...

மிகச் சிறிய ரயில் நிலையம்

SCROLL FOR NEXT